நாட்டின் பல்வேரு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வாடகை மகிழுந்து சாரதிகள்!!
29 தை 2024 திங்கள் 09:17 | பார்வைகள் : 10826
வாடகை மகிழுந்து சாரதிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். " opérations escargot" என சொல்லப்படும் மிக மெதுவாக தங்களது மகிழுந்துகளை வீதிகளில் நகர்த்திச் சென்று போக்குவரத்தை முடக்கும் ஆர்ப்பாட்டத்திலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஜனவரி 29, திங்கட்கிழமை காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. தலைநகர் புறநகர் பரிஸ், மார்செய், லியோன், போர்து போன்ற பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இல் து பிரான்சுக்குள் A13 நெடுஞ்சாலையில் இருந்து périphérique இல் உள்ள Porte d 'Auteuil பகுதி வரை ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.
அதேவேளை, இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan