பாடசாலை பஸ் சாரதியின் மோசமான செயல்
28 தை 2024 ஞாயிறு 13:17 | பார்வைகள் : 10684
கனடாவில் நயகராவில் பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி விபத்து ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்ஸில் பயணம் செய்த மாணவர்களை நிர்க்கதியாக்கி, குறித்த சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
நயகராவின் வெல்லென்ட் பகுதியின் சார்ளஸ் ட்ரைவ் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தினால் பஸ்ஸின் ஒரு டயர் கழன்றிருந்தது எனவும், நான்கு பிள்ளைகள் பஸ்ஸில் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். பெண் ஒருவர் செலுத்திய வாகனத்தில் பஸ் மோதுண்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாடசாலை பஸ்ஸில் நான்கு மாணவர்கள் பயணம் செய்துள்ளனர் எனவும், மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan