டொரன்டோவில் கடும் மழை பெய்யும் அபாயம் - சுற்றாடல் திணைக்களத்தால் எதிர்வு கூறல்

26 தை 2024 வெள்ளி 11:21 | பார்வைகள் : 8453
டொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான மழை பெய்யும் என கனேடிய சுற்றாடல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 15 முதல் 25 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் இந்த மழை காரணமாக வெள்ள நிலைமைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேகமூட்டத்துடனான வானிலையே நிலவும் எனவும் வெப்பநிலை 7 பாகை செல்சியஸ் ஆக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மேகமூட்டத்துடனான வானிலையானது இந்த வார இறுதி வரையில் தொடரும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1