சுவிஸ் நாட்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகம்

21 மாசி 2024 புதன் 08:32 | பார்வைகள் : 7491
சுவிஸ் மாகாணம் வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்க திட்டமிட்டுவருகிறது.
சுவிஸ் மாகாணமான Appenzell Ausserrhoden, வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது தொடர்பில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
மாகாண கவுன்சிலில் இந்த விடயம் தொடர்பான பிரேரணை முதல் சுற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், சுவிஸ் மக்கள் கட்சியின் எதிர்ப்பையும் தாண்டி, முதல் சுற்றில் அது வெற்றியைப் பெற்றுள்ளது.
பிரச்சினை சுவிஸ் மக்கள் கட்சியின் எதிர்ப்புடன் முடிந்துவிடவில்லை.
மாகாணத்திலுள்ள அனைத்து முனிசிபாலிட்டிகளும் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பிறகுதான், அது பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
பொதுமக்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தால், வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் சுவிஸ் மாகாணம் என்னும் பெருமை, சுவிஸ் மாகாணமான Appenzell Ausserrhodenக்குக் கிடைக்கும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1