இலங்கையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி - 4 பேர் படுகாயம்
4 ஆவணி 2023 வெள்ளி 01:49 | பார்வைகள் : 9126
தம்புத்தேகம ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்க தயாரான போது, அதே திசையில் பயணித்த வேன் ஒன்று லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெண்கள் 36 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண்கள் 36 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கஹட்டலஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 55, 11, 06 மற்றும் 08 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிக வேகத்துடன் வேனை ஓட்டி வந்த சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொரியுடன் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan