Paristamil Navigation Paristamil advert login

ரஃபா நகரைக் கைப்பற்றிய ஹமாஸ் - இஸ்ரேல் ராணுவம் தீவிரம்

ரஃபா நகரைக் கைப்பற்றிய ஹமாஸ் - இஸ்ரேல் ராணுவம் தீவிரம்

19 மாசி 2024 திங்கள் 09:23 | பார்வைகள் : 11059


இஸ்ரேல் நாடானது ஹமாஸ் அமைப்பினரை முற்றாக அழிக்கும் வரை ஓயமாட்டோம் என உறுதி அளித்து வருகின்றது.

இந்நிலையில் சர்வதேச நெருக்குதல்களை அலட்சியப்படுத்தி யுத்தத்தின் மூலம் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் தரைப்படைகள் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது.

சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் ரஃபா நகரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே யுத்தம் காரணமாக பலர் வீடுகளை இழந்த நிலையில் அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு அந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டமை உலக நாடுகளின் தலைவர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்