Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ஜாம்பவான் சமிந்தா வாஸின் சாதனையை முறியடித்த 20 வயது வீரர்

இலங்கை ஜாம்பவான் சமிந்தா வாஸின் சாதனையை முறியடித்த 20 வயது வீரர்

19 மாசி 2024 திங்கள் 08:57 | பார்வைகள் : 6025


நமீபியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து பந்துவீச்சாளர் ஆர்யன் தத் அபார சாதனையை படைத்துள்ளார். 

நேபாளத்தின் கிர்டிபூரில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.

இப்போட்டியில் முதலில் ஆடிய நமீபியா அணி 35.1 ஓவரில் 123 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜேஜே ஸ்மித் 26 (46) ஓட்டங்கள் எடுத்தார். 

நமீபியா அணியை மொத்தமாக சரித்தது இளம் சுழற்பந்துவீச்சாளர் ஆர்யன் தத் (Aryan Dutt).

இவர் 34 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.  

முன்னதாக ஆர்யன் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் குறைந்து பந்துகளை வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் சமிந்தா வாஸின் சாதனையை ஆர்யன் முறியடித்தார். 

சமிந்தா வாஸ் 18 பந்துகளில் இந்த சாதனையை செய்திருந்தார். 

அதேபோல் முகமது சிராஜ், அலி கான் ஆகியோரும் 18 பந்துகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் ஆவர். 

20 வயது இளம் வீரரான ஆர்யன் தத் 36 போட்டிகளில் 36 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்