வவுனியாவில் நடைப் பயிற்சிக்கு வரும் மக்களிடம் தங்க ஆபரணங்களை திருடும் இளைஞர்
17 மாசி 2024 சனி 05:05 | பார்வைகள் : 11745
வவுனியா நகர சபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த சில நாட்களாக வவுனியா நகர சபை மைதானத்துக்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்றுமுன்தினம் மாலையும் நகர சபைக்கு அவர் வந்துள்ளார்.
இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகர சபை வளாகத்தில் உள்ள மோட்டடார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்குச் சென்றுள்ளார்.
நடைப் பயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அந்தப் பெண் வந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan