இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்
17 மாசி 2024 சனி 02:46 | பார்வைகள் : 6288
இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.
இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட்.
ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan