மன்னாரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி
16 மாசி 2024 வெள்ளி 09:20 | பார்வைகள் : 8368
மன்னார் - தலை மன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னார் - தலை மன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.
இந்த நிலையில் அருகில் இருந்த CCTV கெமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan