Paristamil Navigation Paristamil advert login

யாழில் பிரதேச வைத்தியசாலையில் மது போதையில் உட்புகுந்தவர்கள் அட்டகாசம்

யாழில் பிரதேச வைத்தியசாலையில் மது போதையில் உட்புகுந்தவர்கள் அட்டகாசம்

16 மாசி 2024 வெள்ளி 04:14 | பார்வைகள் : 5353


அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாகத் தாக்கினர்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டினர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்,பொலிசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்