கண் இமைக்கும் நேரத்தில் கோல் அடித்த எம்பாப்பே
15 மாசி 2024 வியாழன் 08:34 | பார்வைகள் : 9678
ரியல் சோசியேடட் அணிக்கு எதிரான போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி அபார வெற்றி பெற்றது.
UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் PSG மற்றும் Real Sociedad அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியின் தொடக்கத்தில் Real Sociedad வீரர் ஆண்ட்ரே சில்வா அடித்த ஷாட் கோல் போஸ்டில் இருந்து விலகி சென்றது.
அதனைத் தொடர்ந்து 6வது நிமிடத்தில் எம்பாப்பேயின் கோல் முயற்சியை Real Sociedad கோல் கீப்பர் அபாரமாக செயல்பட்டு தடுத்தார். இவ்வாறு முதல் பாதியில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் தடுக்கப்பட்டன.
ஆனால், இரண்டாம் பாதியின் 58வது நிமிடத்தில் கர்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை, PSG வீரர் ஒருவர் தலையால் முட்டி தள்ள, கண் இமைக்கும் நேரத்தில் அங்கு வந்த எம்பாப்பே பந்தை உதைத்து கோலாக மாற்றினார்.
அதன் பின்னர் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா (Bradley Barcola) அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார்.
PSG-க்கு பதிலடியாக Real Sociedad அணியால் இறுதிவரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் PSG அபார வெற்றி பெற்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan