2024 IPL போட்டி CSK பிராண்டு அம்பாசிடராக நியமிக்கப்பட்ட பாலிவுட் அழகி

13 மாசி 2024 செவ்வாய் 08:30 | பார்வைகள் : 5346
2024 IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்டு அம்பாசிடராக பிரபல பாலிவுட் நடிகை நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீ-ன் 17வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்ததுடத்து வெளிவருகின்றன.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் Etihad Airways நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்ற CSK, தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
CSK அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் அழகி கத்ரீனா கைஃப் (Katrina Kaif) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த விஷயத்தை CSK அணி நிர்வாக அதிகாரி இன்னும் வெளியிடவில்லை.
சிஎஸ்கேயின் புதிய ஸ்பான்சர் எதிஹாட்டின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கத்ரீனா, தோனியின் அணியின் பிரச்சாரகராக செயல்படுவார்.
தூம், டைகர் ஜிந்தா, பாங் பாங், சிங் இஸ் கிங் போன்ற படங்களின் மூலம் பிரபலமான கத்ரீனா, 'உரி' புகழ் பாலிவுட் ஹீரோ விக்கி கௌஷலை 2021-இல் திருமணம் செய்து கொண்டார்.
ஐபிஎல் 17வது சீசனை மார்ச் 23ம் திகதி தொடங்க BCCI ஏற்பாடு செய்து வருகிறது. இந்த முறை நடப்பு சாம்பியனாக சென்னை களம் இறங்கும்.
கடந்த சீசனில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோனி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகி மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.
சென்னைக்கு சாதனை கோப்பைகளை தந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது கேரியரின் கடைசி சீசனுக்கு தயாராகி வருகிறார்.
41 வயதான தோனி இந்த 2024 ஐபிஎல் தொடருடன் விடைபெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1