Paristamil Navigation Paristamil advert login

 பருவ மாற்றத்திற்கேற்ப அறிமுகமாகும் நேர மாற்றம் - கனடாவில் அறிவிப்பு

 பருவ மாற்றத்திற்கேற்ப அறிமுகமாகும் நேர மாற்றம் - கனடாவில் அறிவிப்பு

12 மாசி 2024 திங்கள் 09:40 | பார்வைகள் : 9548


கனடாவில் ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 10 ஆம் திகதி ஒரு மணித்தியால மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன்போது மக்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகல்நேரத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள் சாதனங்களில் தானியங்கி அடிப்படையில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்