வெளிநாடு ஒன்றில் தொழிலை இழந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர் !

9 மாசி 2024 வெள்ளி 14:53 | பார்வைகள் : 13721
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் தொழிலையிழந்த நிலையில் நாடு திரும்பினர் .
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பணிபுரிந்த 66 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் , குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்குக் கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் .
இதே தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1