2024 IPL போட்டி - சென்னை அணியின் புதிய ஜெர்சி
9 மாசி 2024 வெள்ளி 07:39 | பார்வைகள் : 5762
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி ஐபிஎல் அணிகள் அதற்கு தயாராகி வருகின்றன.
இந்த முறை சென்னை அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் விமான சேவை நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் Logo பொறிக்கப்பட்ட சென்னை அணியின் புதிய ஜெர்ஸி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2,000 ரசிகர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் சென்னை அணி வீரர்கள் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தனர்.
2024 ஐபிஎல் தொடருக்கும் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற சில ஐபிஎல் அணிகளின் ஸ்பான்சர்களும் மாறியிருப்பதால் மற்ற அணிகளும் விரைவில் தங்களது புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan