கனடிய பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது

8 மாசி 2024 வியாழன் 10:01 | பார்வைகள் : 9379
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் அலுவலகத்தின் மீது பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் தொடர்பில் குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இளஞ்சிவப்பு நிற பெயின்ட்டை காரியாலயம் மீது வீசி எறிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலத்தில் இரண்டு தடவைகள் இவ்வாறு பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பிலான பிணக்குகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டுமென போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்குத் தொடரப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1