Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் மீட்கப்பட்ட புராதன மனித எச்சங்கள்...

கனடாவில் மீட்கப்பட்ட புராதன மனித எச்சங்கள்...

8 தை 2024 திங்கள் 10:23 | பார்வைகள் : 7687


கனடாவின் ரொறன்ரோவில் புராதன மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கட்டிட நிர்மானப் பணிகளுக்காக நிலத்தை தோண்டிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ரொறன்ரோவின் வித்ரோவ் வீதியில் இவ்வாறு மனித உடல் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மனித உடல் பாகங்கள் மீட்பு தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பரிசோனைக்கு உட்படுத்திய தொல்லியல் ஆய்வாளாகள் இவை புராதன காலத்து மனித எச்சங்கள் என கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வுப் பணிகளுக்காக கட்டின நிர்மான நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்ட பகுதி கனடிய பழங்குடியின மக்களின் புதைகுழிகளாக இருக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.