வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு திகதியில், வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த அதிசய இரட்டைக் குழந்தைகள்!
6 தை 2024 சனி 09:28 | பார்வைகள் : 7493
பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் போது இருவருக்கும் ஒரே நாள், ஒரே திகதி மற்றும் ஒரே வருடம் இருக்கும்.
ஆனால் இங்கே ஒரு இரட்டையர்களுக்கு திகதி, வாரம் மற்றும் ஆண்டு முற்றிலும் வேறுபட்டது. அது எப்படி என்று நீங்கள் யோசிக்கலாம்.
நேரம் மாறலாம்., ஆனால் ஆண்டு எப்படி மாறும் என்று மாறும் என நினைக்கிறீர்களா. அப்படி ஒரு ஆச்சரியம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் 40 நிமிட இடைவெளியில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த இரட்டையர்கள் வெறும் 40 நிமிட இடைவெளியில் பிறந்தாலும், அவர்களின் பிறந்த திகதி, ஆண்டு, வாரம் மற்றும் நேரம் முற்றிலும் வேறுபட்டவை.
New Jerseyயில் வசிக்கும் Billy Humphrey மற்றும் அவரது மனைவி Eve ஆகியோர் புத்தாண்டு தினத்தன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
Eve Humphreyக்கு டிசம்பர் 31, 2023 அன்று இரவு 11:48 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் Ezra. ஜனவரி 1, 2024 அன்று அதிகாலை 12:28 மணிக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் Ezekiel.
இரண்டு குழந்தைகளுடன் தாயும் பூரண நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது மிகவும் த்ரில்லாக இருந்தது என கணவர் பில்லி ஹம்ப்ரி கூறினார்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு, தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய எங்கு சென்றாலும் புது அனுபவம் கிடைக்கும்.
எப்போது எங்கு சென்றாலும், இரட்டைக் குழந்தையாகப் பிறந்ததாகச் சொன்னால், ஒரே நாளில் பிறந்தவர்கள் என்ற விவரங்களை எழுத முயல்கிறார்கள். ஆனால் இவர்களின் திகதி, நேரம் மற்றும் ஆண்டு அனைத்தும் வேறுபட்டதாக இருக்கும்.
அவர்களின் தோற்றத்தில் மட்டுமல்ல ஆளுமையிலும் வித்தியாசமான ஸ்டைல்கள் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். Ezra தூங்கிக் கொண்டிருந்தபோது, Ezekiel நகர்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இரட்டையர்களுக்கு 3 வயதில் Hezekiah என்ற மூத்த சகோதரனும் இருப்பதாக அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan