தங்கச் சுரங்கத்தின் மீது வாழும் மக்கள்.. 50% மட்டுமே ஆக்சிஜன் கிடைக்குமாம்.. எங்கு உள்ளது?

6 தை 2024 சனி 09:00 | பார்வைகள் : 6673
பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான தங்கம் இந்த நகரத்தில் உள்ளது எனக் கூறப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த நகரமானது 5,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருப்பதால் உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகிறது.
இதனால், இந்த லா ரின்கோனாடா நகரமானது விண்வெளிக்கு மிக அருகில் உள்ள நகரம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இங்கு குளிராகவும், சராசரி வெப்பநிலை மைனஸிலும் இருக்கிறது.
இந்த நகரத்தில் சுமார் 60,000 மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிக சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதுண்டு.
ஆண்டெஸ் மலையில் அமைந்துள்ள இந்த லா ரின்கோனாடா நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன. சட்டப்படி இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை என்றாலும் பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக தோண்டுகின்றன.
இங்குள்ள ஆண்கள் தங்கச் சுரங்கங்களில் பணிபுரிகின்றனர், பெண்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாறைத் துண்டுகளுக்கு இடையே தங்கத் துகள்களைத் தேடி எடுக்கின்றனர்.
இங்குள்ள ஊழியர்கள் 30 நாட்கள் ஊதியம் இல்லாமல் வேலை பார்த்து, 31 -ம் திகதி சுரங்கத்தில் இருந்து அவ்வளவு தாதுவையும் எடுக்க அனுமதிக்கின்றனர்.
அவர்கள் அந்த தாதுவில் இருந்து எதனை பிரித்தாலும் அது அவர்களுடையது. ஆனால், சில ஊழியர்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் தூக்கி எறியப்படுகின்றனர். இங்கு வரியும் இல்லை, நிர்வாகமும் இல்லை.
முக்கியமாக இந்த நகரத்தில் சாதாரண பகுதிகளுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. அங்கு வசிப்பவர்கள் அதனை பழகிவிட்டனர். வெளியில் இருந்து யாராவது வந்தால் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1