யாழில் களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு
2 தை 2024 செவ்வாய் 03:35 | பார்வைகள் : 6977
யாழில் மீன் பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் ரெஜிபோம் பேட்டி மற்றும் பிளாஸ்டிக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ். பருத்தித்துறை கடற்கரை வீதி, முனை பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் உடபுஸ்ஸல்லாவ மற்றும் லோமன்வத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் குறித்த மீன் பண்ணையில் தங்கியிருந்து வேலை செய்துவந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பெதுருதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan