லைபிரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடித்து விபத்து – 40 பேர் பலி!
29 மார்கழி 2023 வெள்ளி 10:38 | பார்வைகள் : 11923
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவில் பெற்றோல் கொள்கலன் லொறி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், மேலும் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெற்றோல் ஏற்றி கொண்டு வந்த கொள்கலன் லொறி திடீரென விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெற்றோல் கொள்கலன் வொறி வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்தில் கூடியிருந்த பலர் உயிரிழந்ததுடன் பெரும்பாலானோர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan