மாதவிடாய் பற்றி பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..!
23 தை 2024 செவ்வாய் 16:10 | பார்வைகள் : 6232
மாதவிடாய் என்பது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் இயற்கையான மற்றும் முக்கியமான ஒரு அம்சமாகும். இது கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது. ஆனால் மாதவிடாய் பற்றி ஏராளமான ஆச்சரியமூட்டும் உண்மைகள் இருந்தாலும் அது பற்றிய கட்டுக் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றது.
பெரும்பாலான மாதவிடாய் கட்டு கதைகள் தவறானதாகவும் மூடநம்பிக்கைகளை சார்ந்ததாகவும் இருக்கின்றன. இதன் காரணமாக பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சி வழக்கமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கிறதா என்பதை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கே தயங்குகின்றனர்.
மாதவிடாய் சுழற்சி என்பது ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு சிக்கலான மற்றும் நுணுக்கமான செயல்முறை. தோராயமாக 28 நாட்கள் கொண்ட இந்த மாதவிடாய் சுழற்சியின் போது கர்ப்பப்பையின் புரணி உதிர்கிறது. இதன் போது ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.
மாதவிடாயின் போது பெண்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்று பரவலான ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது மாதவிடாய் அறிகுறிகளை மேம்படுத்துவதற்கு உதவும். மாதவிடாய் இரத்தமானது அழுக்கானது அல்லது அசுத்தமானது என்ற ஒரு நம்பிக்கை கடைபிடிக்கப்படுகிறது. உண்மையில் மாதவிடாய் ரத்தம் என்பது உடலின் இயற்கையான திரவமாகும் மற்றும் மாதவிடாயின் போது நல்ல சுகாதாரத்தை பின்பற்றுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம்.
மாதவிடாய் வலி புரிந்துகொள்ள கூடியது, ஆனால் நிலவிவரும் கட்டுக்கதைகளில் அது அற்பமானதாகவும், எளிதில் நிராகரிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் உண்மையில் பல பெண்கள் தாங்க முடியாத மாதவிடாய் வலியை அனுபவித்து வருகின்றனர். இந்த வலியை அங்கீகரித்து அதற்கேற்ற சௌகரியங்களை பெண்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். மோசமான மாதவிடாய் வலியை அனுபவிக்கக்கூடிய பெண்கள் மகளிர் நல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
உங்களது மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் அதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிவதற்கு மகளிர் நல மருத்துவர் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் அனுபவித்து வந்தால் தயக்கம் காட்டாமல் உடனடியாக மகளிர் நல மருத்துவரை அணுகுங்கள்.
ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் தாங்க முடியாத வலி போன்ற பல்வேறு விதமான விஷயங்கள் மாதவிடாய் ஆரோக்கியத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது. பல பெண்கள் தற்போது பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் அல்லது எண்டோமெட்ரியோசிஸ் என்று சொல்லப்படக்கூடிய நீர்க்கட்டி பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாதவிடாயின்போது மேல் குறிப்பிட்ட பிரச்னைகளை சந்திப்பவர்கள், மருத்துவரை அணுங்கி முறையான சிகிச்சையை பெறவேண்டும்.
உலகில் உள்ள பல பகுதிகளில் இருக்கக்கூடிய பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளது. இதன் காரணமாக பெண்கள் தங்களது மாதவிடாயின்போது சிரமத்தை அனுபவிக்கின்றனர். இது அவர்களது தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது. மாதவிடாய் நேரங்களில் துணிகளை தவிர்த்துவிட்டு சானிட்டரி பேட்களை பயன்படுத்தவேண்டும்.
மாதவிடாய் பற்றி பேசுவதில் தவறொன்றும் இல்லை. அதனை அவமானமாக கருதக்கூடாது. உடலின் இயற்கையான ஒரு செயல்பாடாகவே மாதவிடாயை கருத வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan