விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - மகிழுந்து மோதி சிறுமி பலி!!

23 தை 2024 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 7474
விவாயிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இன்று ஜனவரி 23, செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றது. Ariège (Occitanie) நகரினை ஊடறுக்கும் N20 நெடுஞ்சாலையில் பயணித்த மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, தாய் மற்றும் அவர்களது மகள் ஆகிய மூவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது தாய் மற்றும் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறமை அறிந்ததே. உழவு இயந்திரங்களை வீதியில் நிறுத்தி அதனை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலையும் இடம்பெற்றிருந்தது. காலை 4.30 மணி அளவில் ஆரம்பித்திருந்தது. சில நிமிடங்களிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1