இலங்கையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
21 தை 2024 ஞாயிறு 16:44 | பார்வைகள் : 6772
இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தேன்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 200 வளவாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தேன்கோன் இதை தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்ற பயிலுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan