தினமும் ஓட்ஸ் சாப்பிட்டால் நம் உடலுக்கு என்ன நடக்கும்?
21 தை 2024 ஞாயிறு 11:07 | பார்வைகள் : 10998
நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நம் உடலில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை நம் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ஓட்ஸ் நம் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ஓட்ஸை பலரும் தங்கள் காலை நேர தாயத்தில் சேர்த்து கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஓட்ஸ் சாப்பிடுவது நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கூடுதல் உடல் எடையை குறைக்க உதவுவது, இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வது மற்றும் சிறந்த செரிமானம் என ஓட்ஸை டயட்டில் சேர்த்து கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
தினசரி ஓட்ஸ் எடுத்து கொள்வதால் கிடைக்கும் குறிப்பிடத்தகுந்த நன்மைகளில் உடல் எடை இழப்பு முக்கியமான ஒன்று ஓட்ஸில் ஃபைபர் சத்து நிறைந்துள்ளதால் இதனை டயட்டில் சேர்த்து கொள்ளும் ஒருவருக்கு வயிறு முழுமை அடைந்த உணர்வு மற்றும் திருப்தியாக சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் தங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த கலோரி நுகர்வு குறையும். இது எடை இழப்பிற்கு கணிசமாக உதவும்.
தவிர ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், செரிமான அமைப்பு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகின்றன மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் உள்ளிட்டவை மெதுவாக ஜீரணமாகும் என்பதால், ரத்த ஓட்டத்தில் சர்க்கரை படிப்படியாக வெளியிடப்படும். இதனால் ஓட்ஸ் எடுத்து கொள்வது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
நீரிழிவு நிலையுடன் போராடுவோர் அல்லது நாள் முழுவதும் அதிக எனர்ஜியை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்
அதே போல ஓட்மீலில் உள்ள ஃபைபர் சத்து குறிப்பாக "கெட்ட கொலஸ்ட்ரால்" எனப்படும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் லெவலை குறைக்க உதவுகிறது. இதனால் டயட்டில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது இதை நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. தவிர ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் ஓட்ஸின் முக்கிய பங்கு வகித்து ஹை பிளட் பிரஷர் தொடர்பான இதய கோளாறுகளின் அபாயத்தையும் வெகுவாக குறைக்கிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan