ஜொந்தாமினரின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல்! - அல்லா அக்பர் என கோஷமிட்டதால் பரபரப்பு!!

19 தை 2024 வெள்ளி 11:44 | பார்வைகள் : 9595
நபர் ஒருவர் ஜொந்தாமினரின் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். ‘அல்லா அக்பர்’ என கோஷமிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் Saint-Cyr-sur-Mer (Var) நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ஜொந்தாமினருக்கு வழங்கப்படும் வதிவிடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நபர் ஒருவர் உள்நுழைந்துள்ளார். அங்கு தனது காதலியுடன் தங்கியிருந்த ஜொந்தாமினரை குறித்த நபர் தாக்கியுள்ளார்.
முதலில வரை வெளியேறும் படி ஜொந்தாமினர் பணித்ததாகவும், ஆனால் அவர் வெளியேற மறுத்ததாகவும், பின்னர் திடீரென அரபில் அவர் சத்தமாக கத்தியதாகவும், ’அல்லா அக்பர்’ (இறைவனே பெரியவன்) என கோஷமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அதே கட்டிடத்தில் வசித்த பல ஜொந்தாமினர் சம்பவ இடத்தில் வேகமாக குவிந்து, குறித்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான ஜொந்தாம் அதிகாரி மற்றும் அவருடைய காதலி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1