கொழும்பில் கணவனை கொலை செய்த மனைவி

26 ஆடி 2023 புதன் 10:24 | பார்வைகள் : 9038
மொரட்டுவ - மொரட்டுமுல்ல பகுதியில் கணவரை தீயிட்டு கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவரை எரியூட்டியுள்ளார்.
தீக்காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த கணவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1