கனடாவில் தாயை கொலை செய்த மகன்! அதிர்ச்சி சம்பவம்

26 ஆடி 2023 புதன் 05:47 | பார்வைகள் : 9334
கனடாவில் கல்கரியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் தனது தாயை கொலை செய்துள்ளார்.
மேலும் இந்த நபர் மற்றுமொரு பெண்ணையும் படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களையும் பொலிசார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் குறித்த நபரின் தாயான சோல் ஹார்டர் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏனைய பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில் 32 வயதான ஜோன் பற்றிக் பொன் ஹார்டர் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பெண்ணின் மரண விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனைபொலிஸார் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை தொடர்பில் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1