பீர் ஊற்றி மாடு வளர்க்கும் மார்க் ஜூக்கர்பெர்க்...
12 தை 2024 வெள்ளி 08:48 | பார்வைகள் : 6587
உலகில் தலைசிறந்த மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் புதிய வியாபாரத்தில் மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா விளங்குகிறது.
இந்த மெட்டா நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சுக்கர்பெர்க் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருவதோடு, உலகின் பிரபலமானவர்கள் பட்டியலிலும் எப்போது இடம் பிடிப்பவர்.
இவர் தற்போது உலகின் தலைசிறந்த மாட்டிறைச்சியை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தன்னுடைய சமூக வலைதள நிறுவனங்கள் போக புதிதாய் சிறந்த மாட்டிறைச்சி விற்பனை செய்யும் தொழில் ஒன்றையும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
சிறந்த மாட்டிறைச்சியை உருவாக்குவதற்காக மார்க் சுக்கர்பெர்க் தங்களுடைய பண்ணைகளில் உள்ள மாடுகளுக்கு உலர் கொட்டைகள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பீர் ஆகியவற்றை கொடுத்து மாடுகளை வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கால்நடைகள் வாகியூ மற்றும் ஆங்குஸ் வகையை சேர்ந்தவை, ஒவ்வொரு மாடும் ஆண்டுக்கு 5,000 முதல் 10,000 பவுண்டுகள் உணவை உட்கொள்கிறது எனவே இங்கு பல ஏக்கர்கள் கணக்கில் மக்காடமியா மரங்கள் மரங்கள் உள்ளன.
எனது மகள் மக்காடமியா மரங்கள் வளர்ச்சிக்கும், பல்வேறு வகையான விலங்குகளின் பராமரிப்பிற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கிறாள்.
இந்த பயணத்தில் இன்னும் நாங்கள் தொடக்கத்தில் தான் இருக்கிறோம், ஒவ்வொரு சீசனிலும் அதை வேடிக்கையுடன் மேம்படுத்துவத்துவோம்.
தன்னுடைய எல்லா செயல்களை காட்டிலும், இது சுவையானது என்று குறிப்பிட்டு மாட்டிறைச்சி சாப்பிடும் புகைப்படத்தையும் மார்க் சுக்கர்பெர்க் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan