அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சாதனை படைத்த இந்திய அணியின் வீரர்!
.jpg)
14 ஆடி 2023 வெள்ளி 07:25 | பார்வைகள் : 9278
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்திய அணிக்கும் இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசியதன் மூலம் சாதனை படைத்தார்.
டொமினிகாவில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களில் சுருண்டது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 80 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் கூட்டணியால் இந்திய அணி 200 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி கடந்தது.
கடந்த காலங்களில் சொதப்பி வந்த ரோகித் டெஸ்ட் அரங்கில் தனது 10வது சதத்தினை பதிவு செய்தார்.
அவர் 103 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் சதம் அடித்து மிரட்டினார்.
இதன்மூலம் அவர் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும், இந்தியாவுக்கு வெளியே முதல் டெஸ்டில் சதம் அடித்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
2010ஆம் ஆண்டில் சுரேஷ் ரெய்னா தனது அறிமுக டெஸ்டில் சதம் விளாசி இருந்தார். அதன் பின்னர் 13 ஆண்டுகள் கழித்து ஜெய்ஸ்வால் சாதித்து காட்டியுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1