Paristamil Navigation Paristamil advert login

பொங்கல் விழாவில் பால் பொங்குமா

பொங்கல் விழாவில் பால் பொங்குமா

11 தை 2024 வியாழன் 10:18 | பார்வைகள் : 8140


பொறைமன்னர் இல்லை பொறுக்கி யிவரும்
இறையென்ப தேடுவது எங்கு


பொறை, துயரத்தை தானே தாங்கி மக்களைக் காப்பவன்

பொங்கி வந்த பொன்னி யின்று
பொய்த்து வறண்டு மறைந்து போனபின்பு

தங்கி நிற்கும் ஏரி தண்ணீர்
தன்னை நிற்கா செய்தார் தறுதலைகள்

பங்கு போட்டு தானே கான்யாற்றை
பாதை யாக்கி அகல பாதையாக்கி

தங்கு தடைய தன்றி யந்த
தரையில் பேருந் தையும் பறக்கவிட்டார்


விளையும் நிலத்தை விவசா யித்தான்
விற்க செய்தார் வீணாய் நூறிலேக்கர்

சுளையாய் பணத்தை வாங்கி சொகுசாய்
சுகமாய் தின்று சுருக்கில் விவசாயி

களைய பிடுங்கி கழனி நட்ட
கள்ள மிலாவு ழவரு மின்றுவாட

களைகட் டவமைத் தார்பார் அமைச்சர்
காணா தொலைவில் கண்டார் பஸ்நிலையம்

அடிமாட்டு காசுக்கு வாங்கியதி லாபம்
பிடித்தார் தலைவரும் பின்பு

அதிகம் பொழிந்தந்த வான்நீரின் வெள்ளம்
எதிலும் நுழைந்து இறங்கா -- சதியாய்
உயருது மாடி மறையவே உண்மை
தயவின்றி வாழும் தலை

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்