Meaux : தொடருந்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

7 மார்கழி 2023 வியாழன் 17:42 | பார்வைகள் : 13123
பெண் ஒருவர் தொடருந்தில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் Meaux நகரில் இடம்பெற்றுள்ளது.
Meaux மற்றும் Château-Thierry நிலையங்களுக்கிடையே பயணித்த ligne P வழி தொடருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவலி எடுக்க, பயணிகளின் உதவியுடன் காலை 7.30 அளவில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக SNCF சுட்டிக்காட்டியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1