கின்னஸ் சாதனையை முறியடித்த குடிகார நண்பர்கள்
6 மார்கழி 2023 புதன் 13:16 | பார்வைகள் : 6549
99 மதுபானசாலைகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள்.
சிட்னியைச் சேர்ந்த ஹாரி கூரோஸ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஜேக் லாய்டர்டன் (வயது 26) ஆகிய இருவருமே, 24 மணி நேரத்தில் 99 மதுபானசாலைகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்தவர்களாவர்.
இதற்காக 1,500 அவுஸ்திரேலிய டொலர்களை இவர்கள் செலவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஹென்றிச் டி வில்லியர்ஸ் என்பவர் ஒரே நாளில் 78 மதுபானசாலைகளில் குடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதை ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் நண்பர்கள் முறியடித்திருப்பதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்படி ஒரு உலக சாதனை படைப்பதற்கு, இரண்டு முக்கிய காரணங்களை ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் கூறி உள்ளனர். நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய அரியவகை நோயான மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுவரும் எம்எஸ் அவுஸ்திரேலியா என்ற அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காகவும், சிட்னியில் கொரோனா பரவல் காரணமாக அழிந்துபோன இரவு நேர கேளிக்கை வாழ்க்கைக்கு புத்துயிர் அளிக்கவும் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 24 மணி நேரத்தில் 100 மதுபானசாலைகளுக்கு செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், 99வது மதுபானசாலைக்கு சென்று குடித்தபோது 100வது மதுபானசாலைகளுக்கு என தவறாக கணக்கிட்டு, தங்கள் முயற்சியை நிறுத்தியிருக்கிறார்கள்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan