Grigny : பாரிய தீ விபத்து! - 10 வயது சிறுமி பலி!!

6 மார்கழி 2023 புதன் 12:30 | பார்வைகள் : 15944
Grigny (Essonne) நகரில் இடம்பெற்ற தீவிபத்து சம்பவத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.
rue Lavoisier வீதியில் உள்ள கட்டிடத்தில் திடீரென தீ பரவியது. குறித்த கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைந்திருந்த கலையகம் (studio ) ஒன்றில் திடீரென இன்று டிசம்பர் 6, புதன்கிழமை காலை 4 மணி அளவில் தீ பரவி, வேகமாக ஏனைய தளங்களுக்கும் பரவியது.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 60 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இச்சம்பவத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவர் தீயில் கருகி பலியாகியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் அவர் Garches (Hauts-de-Seine) நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எட்டுப்பேர் காயமடைந்ததாகவும் அறிய முடிகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1