Paristamil Navigation Paristamil advert login

பெற்றோரை விட அதிக மதிப்பு மிக்கவர்கள் யாரும் இல்லை

பெற்றோரை விட அதிக மதிப்பு மிக்கவர்கள் யாரும் இல்லை

5 மார்கழி 2023 செவ்வாய் 07:27 | பார்வைகள் : 5298


ஒரு சாமியார், ஆன்மீக உரை நிகழ்த்திக் கொண்டு இருந்தார். அப்போது நம்மாளு ஒருவர் அதில் கலந்து கொண்டார். அப்போது நடந்த சம்பவத்தை பாருங்க. 

சாமியார்: இந்த உலகத்திலேயே பெற்றோரை விட அதிக மதிப்பு மிக்கவர்கள் யாரும் இல்லை.. சரியா.. பெற்றோரை மதிக்க வேண்டும்.. பெற்றோர்தான் ரொம்ப முக்கியம்..

இப்படி சாமியார் பேசிக் கொண்டிருந்தபோதே, நம்மாளு வாய்ஸ் கொடுத்தார். "ஆகையால் மக்களே, நீங்க எல்லாரும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொண்டு பெற்றோராகிவிடுங்க.. நம்மள இந்த ஊரே மதிக்கும்னு சாமியாரு சொல்ராறுங்கோவ்.." என்றாரே பார்க்கலாம். 

கூடியிருந்த கூட்டமெல்லாம், சாமியார் சொன்னதை மறந்துட்டு.. கொல் என்று சிரிக்க, அந்த இடமே கலகலப்பானது. நம்மாளுங்கள பற்றி சொல்லியா தெரியனும். எங்க போனாலும் கேட்ட போடுவாய்ங்களே..!
 

வர்த்தக‌ விளம்பரங்கள்