Villejuif : கட்டிடத்தில் மோதிய விமானம்! - மூவர் காயம்!!
5 மார்கழி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 15583
சிறிய விமானம் ஒன்று தனது வழமையான இறங்கு தளத்தை விட்டு, Villejuif (94) நகரில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் தரையிறங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை, Boulevard Maxime-Gorki கட்டிடத்தொகுதிகளுக்கு இடையே உள்ள ஒரு மிகச்சிறிய தோட்டப்பகுதியில் இந்த சிறிய விமானம் இறங்கு கட்டிடத்தில் இடித்து நின்றது. விமானத்தில் மூவர் பயணித்திருந்த நிலையில், மூவரும் காயமடைந்துள்ளனர். அவசர மருத்துவப்பிரிவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
குறித்த விமானம் Rouen (Seine-Maritime) நகரில் இருந்து அனுமதியுடன் பறந்து வந்ததாகவும், விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து தொடர்பின் விசாரணைகளை மேற்கொண்டனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan