இலங்கையில் 7 இலட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்
4 மார்கழி 2023 திங்கள் 11:15 | பார்வைகள் : 6077
மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டின் மொத்த சனத் தொகையில், 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார நுகர்வோர்களாக உள்ளனர்.
அவர்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மொத்த மின்சார பாவனையாளர்களில் 65 இலட்சத்துக்கும் அதிகமானோர் திட்டமிட்டபடி மின் கட்டணத்தைச் செலுத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணமாக, நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துவதற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan