விசாரணைகளில் திருப்பம் - மகன் குறித்து முன்னதாகவே காவல்துறையினரிடம் தெரிவித்த பயங்கரவாதியின் தாய்!
4 மார்கழி 2023 திங்கள் 09:00 | பார்வைகள் : 10324
பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, பயங்கரவாதியின் தாக்குதல் நோக்கம் குறித்து முன்னதாகவே அவனது தாய் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாக அறிய முடிகிறது.
பயங்கரவாதி Armand R இன் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தாய், கடந்த ஒக்டோபரின் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்ட நபர்களைக் கண்காணிக்கும் பட்டியலில் ( fiche S) பயங்கரவாதி Armand R இன் பெயர் பதியப்பட்டிருந்தது. அதையடுத்து அவர் தம்மைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். பெரும்பாலான நேரத்தை அறைக்குள்ளேயே செலவிட்டுள்ளார். அதையடுத்து அவரது நடவடிக்கை குறித்து அவரது தாய் கவலையுற்றதாகவும், காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது.
பின்னார் காவல்துறையினர் Armand R இனை மருத்துவர்களிடம் மருத்துவ சோதனைக்குட்படுத்தியதாகவும், அதில் குறிப்பிடும் படியான இடையூறுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டதால், இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிகமாக அதில் மேற்கொண்டு கவனம் செலுத்தவில்லை. அதையடுத்தே மேற்படி தாக்குதல் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan