இலங்கையில் சாரதிகளிடம் இருந்து புள்ளிகளைக் கழிக்கும் முறை!
3 மார்கழி 2023 ஞாயிறு 09:55 | பார்வைகள் : 6719
இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரைக்கு நேற்று (02) பிற்பகல் சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்,
“அதிக அளவில் வீதி விபத்துகள் நடக்கின்றன. பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களின் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதுதான். அதற்கு முன், திறமையின்மையின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரம் புள்ளியிடப்பட்டு இரத்து செய்யும் நடைமுறையை அமுல்படுத்த உள்ளோம்” என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan