ரொறன்றோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு தொடர்பில் புதிய தடை
2 மார்கழி 2023 சனி 10:41 | பார்வைகள் : 7964
கனடாவின் ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு தொடர்பில் அபாராதம் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரசபை அல்லது தனியார் இடங்களில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை தரித்து நிறுத்துவோரிடம் அபராதம் அறவீடு செய்யப்பட உள்ளது.
இதுவரையில் இவ்வாறு சட்டவிரோதமான வாகனத்தை நிறுத்துவோரிடமிருந்து 30 டொலர்கள் அபராதம் அறவீடு செய்யப்பட்டது.
இனி வரும் காலங்களில் இந்த அபராதத் தொகை 75 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அபராதத் தொகை குறைவானதாக காணப்பட்தனால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் நிலவி வருவதாக காவல்துறையிர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan