'பருத்திவீரன்' படத்தை தயாரித்தது இவரா?

1 மார்கழி 2023 வெள்ளி 16:20 | பார்வைகள் : 6965
பருத்திவீரன்' படத்தை தயாரித்ததே அமீரின் நிறுவனம் தான் என வலைப்பேச்சு பிஸ்மி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007ம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்தார். இந்தப் படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படத்தின் இயக்குனர் அமீர் தரப்புக்கும், ஞானவேல் ராஜா தரப்புக்கும் இடையில் பிரச்சனை நீடிக்கிறது.
ஏற்கனவே இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், சமீபத்தில், அமீர் பற்றி ஞானவேல் ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புக் கூறிய சசிக்குமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, பாரதிராஜா உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவளித்தனர்.
.
எனவே அமீருக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்று வலைப்பேச்சு பிஸ்மி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பருத்தி வீரன் பட சென்சார் சான்றிதழை வெளியிடுள்ள அவர், அப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கீரின் இல்லை. அமீரின் டீம்வொர்க் புரடக்சன்ஸ் ஹவுஸ் என்று தெரிவித்துள்ளார்.
இது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விரைவில் அமீர் அல்லது ஸ்டுடியோ கீரின் ஞானவேல் ராஜா விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், நடிகர் கார்த்தி(கார்த்தியின் முதல் படம்) மற்றும் அவரது அண்ண சூர்யா, தந்தை சிவக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1