Paristamil Navigation Paristamil advert login

வைக்கோல் நாய்

வைக்கோல் நாய்

27 மார்கழி 2023 புதன் 08:11 | பார்வைகள் : 6172


ஒரு மாட்டு தொழுவத்துல நிறய மாடுகள் இருந்துச்சு

அந்த மாடுகளுக்கு நிறைய வைக்கோல் கொண்டுவந்து போடுவாரு அந்த மாடுகளோட எஜமானர்

மாடுகளோட பாதுகாப்புக்காக ஒரு நயா வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சாரு அந்த எஜமானர்

தன்னை மாடுகளுக்கு காவலா நியமிச்சத நினச்சு ரொம்ப பெருமை பட்டுச்சு அந்த நாய்

சாப்பாட்டு நேரம் வந்ததும் தொழுவத்துல இருந்த மாடுகளை வைக்கோல் சாப்பிட அவுத்து விட்டுட்டு ,நிறய வைக்கோலை எடுத்து மாடுகளுக்கு முன்னாடி போட்டுட்டு போய்ட்டாரு அந்த எஜமானர்

அவரு போனதுக்கு அப்புறம் அந்த வைகோல் மேல ஏறி நின்னு மாடுகள் சாப்பிடுறத தடுத்துச்சு நாய்

என்னோட பாதுகாப்புல இருக்குற நீங்க நான் சொன்னதுக்கு அப்புறம்தான் இந்த உணவ சாப்பிடணும்னு சொல்லி குறைக்க ஆரம்பிச்சுச்சு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அங்க வந்து நடக்கிறத பார்த்த எஜமானருக்கு கோபம் வந்து ஒரு குச்சிய எடுத்து நாய அடி அடின்னு அடிச்சுட்டாரு

தனக்கு கொடுத்த கடமைய செய்யாம அதிகாரம் செலுத்துனதுக்கு சரியான தண்டனை கிடைச்சுச்சு அந்த நாய்க்கு

வர்த்தக‌ விளம்பரங்கள்