பண்டஸிலிகா தொடர் - இளம் வீரரின் மிரள வைத்த கோல்

21 மார்கழி 2023 வியாழன் 10:14 | பார்வைகள் : 5307
பண்டஸிலிகா தொடரில் பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வுல்ஃப்ஸ்பர்க் அணியை வீழ்த்தியது.
Volkswagen Arena மைதானத்தில் நடந்த பண்டஸ்லிகா தொடர் போட்டியில் பாயர்ன் முனிச் (Bayern Munich) மற்றும வுல்ஃப்ஸ்பர்க் (Wolfsburg) அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் இரு அணி வீரர்களும் கொட்டும் மழையிலேயே ஆக்ரோஷமாக விளையாடினர்.
ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பாயர்ன் அணியின் இளம் வீரரான ஜமால் முசியாலா (Jamal Musiala) கோல் அடித்தார்.
முல்லர் (Muller) பாஸ் செய்த பந்தை மின்னல் வேகத்தில் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 43வது நிமிடத்தில் பாயர்ன் அணிக்கு முல்லர் உதவியால் மீண்டும் ஒரு கோல் கிடைத்தது.
நட்சத்திர வீரர் ஹரி கேனிடம் பந்தை முல்லர் கடத்த, அவர் அதனை அதிவேகத்தில் வலைக்குள் தள்ளி கோலாக்கினார்.
அதன் பின்னர் ஆட்டத்தின் 45+1வது நிமிடத்தில், வுல்ஃப்ஸ்பர்க் வீரர் மாக்ஸிமில்லியன் அர்னால்டு (Maxmilian Arnold) அபாரமாக ஒரு கோல் அடித்தார்.
முதல் பாதியில் 2-1 என பாயர்ன் முனிச் முன்னிலை வகித்த நிலையில், இரண்டாம் பாதியில் இருபுறமும் தடுப்பாட்டத்தில் அனல் பறந்தது.
இதன் காரணமாக இரு அணி வீரர்களாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1