கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நாய்!
20 மார்கழி 2023 புதன் 08:25 | பார்வைகள் : 6460
இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னகத்தே கொண்டு புதிய செய்திகளை அன்றாடம் எமக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றது.
பயனுள்ள பல சுவாரஷ்யமான தகவல்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
அந்தவகையில் விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
ஒரு நாய் உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிகளில் சம்பாதிக்கிறது.
அதனிடம் மிக அதிக அளவில் பணம் இருப்பதால், தனது முதலாளியை இது தனது அகவுண்டண்ட் ஆக்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த நாயின் பெயர் ப்ரூடி.
கோல்டன் டூடுல் நாய் இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் வருமானம் கோடிக்கணக்கில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் வயது 4, ஆனால், தற்போது வரை இந்த நாய் மொத்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 8 கோடியே 29 லட்சம் சம்பாதித்துள்ளது.
இந்த ப்ரூடி நாய்க்கு சமூக ஊடக தளமான டிக்டாக்கில் கணக்கு உள்ளது.
இதற்கு 6 மில்லியன் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
ப்ரூடிக்கு அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கும் உள்ளது. அதில் அதற்கு ஒரு மில்லியன் அதாவது 10 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
இந்த நாய் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ளது. ப்ரூடியின் உரிமையாளர் கிளிஃப். இந்த நாயின் உரிமையாளர் தன்னை தனது நாயின் மேலாளராக நியமித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ப்ரூடியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
இதன் மூலம் இன்று ப்ரூடி கோடிகளை சம்பாதிக்கிறது.
ப்ரூடியின் சம்பாத்தியம் கோடிகளில் இருந்தாலும், அது வீட்டில் ஒன்றும் செய்யாமல் இருக்கவில்லை.
அது தனக்கென ஒரு புதிய வேலையையும் பெற்றுள்ளது. இப்போது இந்த கோல்டன் டூடுல் நாய் மியாமி கடற்கரை காவல் துறையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
சமீபத்தில் இந்த நாய் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக உறுதிமொழியையும் எடுத்துள்ளது.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த நாயும் போலீசாருடன் சென்று குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளது.
இந்த நாயின் உரிமையாளர் அதன் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan