அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம் மீது கார் மோதி விபத்து
19 மார்கழி 2023 செவ்வாய் 02:44 | பார்வைகள் : 7286
அமெரிக்காவில் Delaware-யில் ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் வில்மிங்டனில் பிரச்சார தலைமையகத்தில் இருந்து வெளியேறினார்.
அப்போது அவரது பாதுகாப்பு வாகனம் மீது திடீரென வேகமாக வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
உடனே பாதுகாப்பு பணியாளர்கள் ஜோ பைடனை பாதுகாப்பாக காத்திருப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ''ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி இருவரும் நலமாக உள்ளனர்'' என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் AFP செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் ஜோ பைடன் பாதுகாப்புடன் தனது குடும்பத்துடன் வீடு சேர்ந்தார் என பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan