Aubervilliers : பேருந்து நிறுத்தத்தில் தீ விபத்து! - ஏழு வாகனங்கள் தீக்கிரை!!

17 மார்கழி 2023 ஞாயிறு 16:48 | பார்வைகள் : 13221
Aubervilliers ( Seine-Saint-Denis) நகர பேருந்து நிறுத்தத்தில் (dépôt) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏழு பேருந்துகள் தீக்கிரையாகியுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. இயற்கை எரிவாயு நிரப்பப்பட்ட பேருந்து ஒன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. தீயணைப்பு படையினர் மிக விரைவாக செயற்பட்டும், தீயினை கட்டுப்படுத்த முடியவில்லை.
மொத்தமாக ஏழு பேருந்துகள் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1