முற்று முழுதாக தானியங்கி முறைக்கு மாறும் 13 ஆம் இலக்க மெற்றோ!

9 கார்த்திகை 2023 வியாழன் 18:11 | பார்வைகள் : 15005
13 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் முற்று முழுதாக தானியங்கி முறைக்கு மாற்றப்பட உள்ளதாக இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து சபை ( Île-de-France Mobilités) அறிவித்துள்ளது.
தற்போது நான்காம் இலக்க மெற்றோ மிக வேகமாக தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. இவ்வருடத்தின் இறுதிக்குள் அதன் பணிகள் நிறைவடையும் என அறிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 13 ஆம் இலக்க மெற்றோ இந்த தானியங்கி முறைக்கு மாற்றப்பட உள்ளது. 2033 ஆம் ஆண்டுக்குள் முற்று முழுதாக அவை மாற்றப்பட்டு விடும் எனவும் Île-de-France Mobilités அறிவித்துள்ளது.
பரிசில் 1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் தானியங்கி முறையில் இயங்கி வரும் நிலையில், மூன்றாவதாக இந்த நான்காம் இலக்க மெற்றோ தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து நான்காவது மெற்றோ சேவையாக இந்த 13 ஆம் இலக்க மெற்றோ தானியங்கி முறைக்கு மாற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1