ஆவணங்களற்ற அகதிகளுக்கு மருத்துவ உதவி நிறுத்தம்! - செனட் சபையில் ஆதரவு வாக்கெடுப்பு!!
8 கார்த்திகை 2023 புதன் 06:00 | பார்வைகள் : 10691
ஆவணங்கள் இல்லாத அகதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகள் நிறுத்தப்படுவது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை செனட் மேற்சபையில் ஆதரவு வாக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
l’aide médicale d'Etat (AME) என அழைக்கப்படும் மருத்துவ உதவிகள் இதுவரைகாலமும் அகதிகள், ஆவணங்கள் மற்றும் பதிவுகள் இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி, கர்ப்பகால மருத்துவங்கள், திடீர் விபத்துக்கள் போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் இது போன்ற உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 400,000 பேர் இந்த உதவியினை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அதனை நிறுத்துவது தொடர்பில் கடந்த சில நாட்களாக விவாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. வருடம் ஒன்றுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் தொகை அரசு செலவிடுகிறது.
இந்நிலையில், நேற்று செனட் மேற்சபையில் இது தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஆதரவாக 200 வாக்குகளும் எதிராக 136 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து இந்த சட்டம் செனட் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan