Paristamil Navigation Paristamil advert login

முதியவர்களுக்கான வீடியோ கேமை அறிமுகப்படுத்திய 87 வயது ஜப்பான் மூதாட்டி!

முதியவர்களுக்கான வீடியோ கேமை அறிமுகப்படுத்திய 87 வயது ஜப்பான் மூதாட்டி!

7 கார்த்திகை 2023 செவ்வாய் 12:31 | பார்வைகள் : 4823


ஜப்பானை சேர்ந்த 87 வயது மூதாட்டி ஒருவர், வீடியோ கேமை அறிமுகப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக சாதனை படைப்பதற்கும், எந்தவொரு விடயங்களை புதிதாக கற்றுக் கொள்ளவும் வயது ஒரு தடையில்லை என்றே சொல்வார்கள். 

அப்படி ஒரு சம்பவம் தான் ஜப்பானில் நடந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த 87 வயதுடைய மசாகோ வகாமியா என்ற பெண் ஒருவர் 43 வருடங்கள் வரை வங்கியில் பணியாற்றியுள்ளார். 

பின்பு, தனது 60 வயதில் இருந்து கம்ப்யூட்டர் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

மூதாட்டியான மசாகோ வகாமியா, முதியவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம் மற்றும் மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளர். 

இந்த வீடியோ கேமின் பெயரானது ஹினாடன் ஆகும்.

இந்த செயலியானது, முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேகமான பொம்மை விளையாட்டாகும்.

 இது தொடர்பான தகவல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தற்போது, இது இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளுகிறது.    

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்